நிதியமைச்சர் மங்கள சமரவீர கையொப்பமிடப்பட்ட 5,000 ரூபா பணத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
பணத்தாள் அச்சிடும் நிறுவனமான டீ லா ரூ (De La Rue) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த பணத்தாள் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று(21) திறைசேரியில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.