மியன்மார் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழலை அடுத்து தேவை ஏற்படும் பட்சத்தில் ரோஹிங்யா அகதிகள் விடயத்தில் கரிசனையின்றி செயற்படாமல் அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று(21) பாராளுமன்றில் தெரிவித்தார்.
பெளத்த நாடு என்ற அடிப்படையில் நாம் கவலை கொள்கின்றோம். மியன்மாரில் சமாதானம், சட்டம், ஒழுங்கை பாதுகாக்குமாறு நாம் மியன்மார் அரசிடம் கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(rizmira)