வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மீள இயக்குவதற்கு நடவடிக்கை…

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை மீள இலாபகரமாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று குறித்த தொழிற்சாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த போது குறித்த விடயத்தைக் கூறியுள்ளார்.

குறித்த தொழிற்சாலை தற்போது நட்டத்தில் இயங்கி வரும் நிலையில், அதனை கொரிய நிறுவனம் ஒன்று குத்தகை அடிப்படையில் நடத்திச் செல்வதற்கான யோசனையை முன்வைத்துள்ளது.

இந்த யோசனை குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிற்சாலையை மீள செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இரா.சம்பந்தன் உறுதியளித்துள்ளார்.