மும்பையில் உடல் எடைகுறைப்பு சிகிச்சை மேற்கொண்ட எமான் அகமது என்ற 37 வயதுடைய பெண் அபுதாபியில் உயிரிழந்துள்ளார்.
எமான் அகமது(வயது 37) என்ற வெளிநாட்டு பெண் உலகின் மிகவும் பருமனான பெண்ணாக கருதப்படுபவர்.
கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உடல் எடைகுறைப்பு சிகிச்சைக்காக மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டார். அச்சிகிச்சையில் 504 கிலோவில் இருந்து 242 கிலோவிற்கு அவரது எடை குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், அதை எமானின் சகோதரி, சிகிச்சைகளின் பின்னர் எமானுக்கு உடலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த பிரச்சினைகளை அடுத்து, எமான் அஹமது மும்பையில் இருந்து எமிரெட்ஸ் அனுப்பப்பட்டு, அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதயத்தில் பிரச்சினை மற்றும் சிறுநீரகம் செயற்படாமை காரணமாகவே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது