வெள்ளை நிறத்தில் சருமம் இருக்கும்போது கருமையான கை மற்றும் கால் முட்டிகள் இந்த தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது.
எவ்வளவோ செலவு செய்து பல பொருட்களை வாங்கி கருமை நிறத்தை மறைக்கிறோம். ஆனால் இந்த கருமையை போக்க நமது சமயலறையில் இருக்கும் பொருட்களே போதுமானது.
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யை கை மற்றும் கால் முட்டிகளில் தடவி வர வேண்டும். இதனால் அதன் கருமை நிறம் நாளடைவில் மாறும். ஆலிவ் எண்ணெய்யை முட்டிகளில் தடவுவதால் மற்ற இடங்கள் போல இவையும் வெண்மையாகும். இரண்டையும் கலந்து கைகளில் தேய்க்கலாம்.
எலுமிச்சை சாறு:
முழங்கை மற்றும் கால் முட்டிகளில் எலுமிச்சை சாற்றை தடவி வர சில நாட்களில் நீங்கள் நினைத்தபடி உங்கள் முட்டிகள் வெண்மையாகும். பாதி அறிந்து சிறிதளவு பிழிந்த எலுமிச்சை பழத்தில், சர்க்கரையை தூவி கொள்ள வேண்டும். சர்க்கரை சேர்த்த எலுமிச்சை பழத்தோலை கொண்டு கை மற்றும் கால் முட்டிகளில் நன்றாக தேய்க்க வேண்டும். 1 வாரம் இதனை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கு
எலுமிச்சை மற்றும் உப்பு:
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து முட்டிகளில் தடவினால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறை சேர்த்தால் ஒரு இயற்கை ப்ளீச் கிடைக்கும். இது முழங்கால் மற்றும் முழங்கையின் கருமை நிறத்தை மாற்றி நல்ல பொலிவை கொடுக்கும்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை வெட்டி உங்கள் முழங்கால் மற்றும் முழங்கையில் வைப்பதால் அதன் நிறம் மாறும். அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ் செய்து முட்டிகளில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
கடலை மாவு மற்றும் தயிர்:
இயற்கை முறையில் சருமத்தை மென்மையாக்க கடலை மாவை பயன்படுத்தலாம். இதனுடன் தயிர் சேர்த்து சருமத்தில் தடவுவதால் சருமம் மேலும் அழகாகும். கை மற்றும் கால் முட்டிகளின் நிறம் மாறி அழகு பெறும்.