நேற்று(26) நள்ளிரவுடன் சப்ரகமுவ மாகாண சபை கலைப்பு..

சப்ரகமுவ மாகாண சபையின் ஐந்து வருட ஆயுட் காலம் நேற்று(26) நள்ளிரவுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 28 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்ததோடு, 14 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியானதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)