நாட்டின் பல பாகங்களிலும் அடைமழை..

மேல்சப்ரகமுவ மற்றும் மத்திய  மாகாணங்களில் காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்;ச்சி பதிவாகும் என்று திணைக்களம் இன்று(27) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் காணப்படலாம்; என்றும் வடக்கு, வடமத்திய, வடமேல், ஊவா, மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வலுவான காற்றை எதிர்ப்பார்க்க முடியும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மாகாணங்களிலும் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.