பென் ஸ்டோக்ஸ் இன் கைதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து பென் விலகல்..

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ். கடந்த திங்கட்கிழமை அதிகாலை பிரிஸ்டோனில் உள்ள பகுதியில் ஒரு நபரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சந்தேகத்தின் பேரில் பென் ஸ்டோக்ஸை பொலிசார் அழைத்துச் சென்று இரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ரிலீஸ் செய்துள்ளனர்.

அவருடன் மற்றொரு வீரரான ஹேல்ஸும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் இன்று(27) நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 4-வது போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் ஆஷஸ் தொடருக்கான அணி அறிவிக்கப்படும் நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்த பிரச்சினையில் மாட்டியுள்ளார்.

 

(rizmira)