2018ஆம் வருட தேசிய வெசாக் தின கொண்டாட்டங்கள் குருநாகலையில்..

2018ஆம் வருடத்துக்கான தேசிய வெசாக் தின கொண்டாட்டங்கள் குருநாகலையில் நடைபெறவுள்ளதாகவும், அது தொடர்பான அறிவித்தலை பௌத்த சாசன அமைச்சின் அனுமதியுடன் பௌத்த கலாச்சார திணைக்களம் நேற்று(26) வௌியிட்டுள்ளது.

எதிர்வரும் 2018 ஏப்ரல் 28ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 04ஆம் திகதி வரை குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தி குறித்த இந்த வெசாக் தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதன்போது மாவட்டத்தில் செயற்படும் பௌத்த அமைப்புகளை வலுப்படுத்தல், புராண விகாரைகளை திருத்தியமைத்துப் பாதுகாத்தல், பௌத்தர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான செயற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.

 

(rizmira)