விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல்..

கோகுல் இயக்கத்தில் `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் ஆரம்பித்த அதே நாளில் விஜய் சேதுபதி தனது அடுத்த படமான `ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பித்து இருக்கிறார்.

‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி தற்போது, `சூப்பர் டீலக்ஸ்’, `96′, `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் `சீதக்காதி’, `சயீ ரா நரசிம்ம ரெட்டி’, `மா மனிதன்’, `ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் `ஜுங்கா’ படத்தை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாரீஸில் இன்று ஆரம்பமான இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, தொடர்ந்து 30 நாட்கள் நடக்கவுள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதே நாளில் `ஜுங்கா’ படத்தின் படப்பிடிப்புயும் இயக்குநர் கோகுல் தொடங்கி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.