இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு..

அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதுடன் 527 பேர் காயமடைந்துள்ளனர்.

திறந்த வெளியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது இளைஞர் ஒருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரிடம் இருந்து 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் இடையில் தொடர்புகள் இல்லை என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியில் 22 ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது