பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜூதீன் கொலை வழக்கில் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்யும் உத்தரவை குற்றவியல் விசாரணைப் பிரிவு கோரியுள்ளனர்.
தாஜூதீனின் கொலை தொடர்பில் பிரேத பரிசோதனையை நடத்திய ஆனந்த சமரசேகர, அது தொடர்பான சாட்சியங்களை மறைத்தார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலை வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான ஆனந்த சமரசேகரவை கைது செய்யும் உத்தரவை நேற்று(02) குற்றவியல் விசாரணைப் பிரிவு நீதிமன்றில் கோரியது.
இதனை கவனத்தில் கொண்ட கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிவான், ஆனந்த சமரசேகரவினால் தமது கைதுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அதனையும் கருத்திற் கொண்டு உரிய உத்தரவை வழங்குவதாக அறிவித்தார்.
(rizmira)