ஒரு செல்லோடேப் எப்படி உங்கள் மேக்கப்பை கச்சிதமாக்கும்?

கவர்ச்சியான இறகு போன்ற கண் இமைகளை பெறுவதற்கு, அழகான நகப்பூச்சை மிகவும் கவனமாக தீட்டிக் கொள்வது ஒரு கலை. இவை அனைத்தையும் முற்றிலும் புதிதாக செலோ டேப்பை பயன்படுத்தி மிகவும் எளிதாக செய்து விடலாம்.

இறகு போன்ற ஐ லைனர் :
செலோ டேப்பை இரண்டு மெல்லிய கீற்றுகளாக வெட்டி உங்கள் கண்களின் மூலையில் புருவங்களுக்கு இணையாக செலோ டேப்பை ஒட்டிக்கொள்ளுங்கள். உங்களுடைய கண்களின் ஒரு மெல்லிய கோடை ஐ லைனரில் வரைய வேண்டும். வெளிப்பக்கம் மட்டும் நீங்கள் விரும்பிய வடிவில் ஒரு தடித்த வில் வடிவ கோடு வரைய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் உலர விடுங்கள். அதன் பின் நீங்கள் ஒட்டிய செலோ டேப்பை நீக்கலாம்.

நகப் பூச்சு :
சிறிய கீற்றுகளாக செலோ டேப்பை வெட்ட வேண்டும். உங்களின் நகம் முடியும் இடம் மற்றும் நகங்களின் இரு பக்கங்களிலும் வெட்டி வைத்த செலோ டேப்பை ஒட்ட வேண்டும். அதன் பிறகு வழக்கம் போல் உங்களின் நகங்களின் மீது நகப்பூச்சை பூசலாம். நகப்பூச்சு உலர்ந்த பின்னர் செலோ டேப்களை நீக்க வேண்டும்

புருவம் வடிவமைக்க :
டேப்பை உங்களின் வில் வடிவ புருவத்தின் வளைவுகளின் கீழ் ஒட்டவும். அதன் பிறகு உங்களின் புருவத்தை தீட்டி முடித்த பின்னர், மெதுவாக செலோ டேப்பை நீக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கு கூர்மையான சுத்தமான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட புருவம் கிடைத்து விட்டது

கண் மேக்கப்பிற்கு :
உங்கள் ஐ ஷேடோ சில நேரங்களில் சீரற்ற முறையில் உங்களின் கன்னங்களின் மீது ஒட்டிக் கொள்ளலாம். அப்பொழுது உங்களின் ஒப்பனையை பாதிக்காமல் சீராக்குவது இயலாத காரியம். செலோ டேப்பை இரு முறை ஒட்டி நீக்கி அதிலுள்ள அதிகப்படியான பிசினை நீக்க வேண்டும். செலோ டேப்பின் ஒட்டும் பக்கம் வெளிப்புறம் இருக்குமாறு டேப்பை உங்களின் கை விரலில் சுற்றி அதன் பின்னர் மெதுவாக ஒழுங்கற்ற அடித்தள தீற்றல்களை ஒற்றி எடுக்க வேண்டும். இப்பொழுது உங்களின் ஒப்பனையை கலைக்காமல், உங்களின் சீரற்ற அடித்தளத்தை நாம் சீராக்கி விட்டோம்.