தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் இருந்த தொகுப்பாளினிக்கு திடீர் பிரசவ வலி.. (Photos)

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் இருந்த தொகுப்பாளினிக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து பின்னர் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல NBC தொலைகாட்சி சேனலில் தொகுப்பாளினியாக வேலை செய்து வரும் Natalie Pasquarella(35) என்பவர் நிறைமாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு விவாதம் ஒன்றில் Natalie பேசிக் கொண்டிருந்தார். அவருடன் விவாதிக்க மூன்று நபர்கள் உடனிருந்தனர்.

அப்போது Natalie-வுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்தாமல் நேரடி நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து பின்னர் வலியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து உடனிருந்த நபர்கள் Natalie-வை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்ந்தனர்.

அங்கு Natalie-வுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த அவரின் கணவர் Jamin தாய் மற்றும் குழந்தையை பார்த்து மகிழ்ந்தார்.

குழந்தை மற்றும் கணவருடன் தான் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள Natalie தனக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Image result for Natalie Pasquarella

Image result for Natalie Pasquarella

 

(rizmira)