உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பம்…

க. பொ. த உயர்தரப் பரீட்சையின் 11 பாடங்களுக்குரிய செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பொறியியல் தொழில்நுட்ப பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரியல் தொழில்நுட்ப பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 20ம் திகதி முதல் 22ம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் அழகியல் மற்றும் மனைப் பொருளியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை எதிர்வரும் 20ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலும், நாடு பூராகவும் அமைந்துள்ள 398 மத்திய நிலையங்களில் 56 ஆயிரத்து 439 பரீட்சார்த்திகள் இந்த செயன்முறை பரீட்சைக்கு தோற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.