மின்சாரத் தேவைக்காக மன்னாரில் 100MW சூரிய சக்தி மின்சா ரத்தைத் தயாரிப்பதற்கு மின்சக்தி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
குறித்த இந்தத் திட்டத்தால் மன்னாரில் சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமெனவும் இந்தத் திட்டத்துக்குச் சமயத் தலைவர்களும் பொதுமக்களும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வருகை தராததால் பதில் அமைச்சர் அஜித் பீ.பெரேரா இத்திட்டத்திற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்த நிலையிலேயே அமைச்சர் ரிஷாத் தனது கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்து குறித்த இந்தத் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளார்.
(rizmira)