ஐரோப்பாவின் பிரம்மாண்ட திரையரங்கில் `மெர்சல்’…

`கபாலி’, `பாகுபலி-2′ பட வரிசையில் விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படத்திற்கு புதிய அந்தஸ்து ஒன்று கிடைக்கவிருக்கிறது.

அட்லி இயக்கத்தில் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் இணைந்து நடித்து வரும் படம் `மெர்சல்’.

இந்நிலையில், மெர்சல் படத்தை ஐரோப்பாவின் மாபெரும் திரையரங்கமான பாரீசின் Le Grand Rex திரையரங்கில் மெர்சல் படம் திரையிடப்பட இருப்பதாக `லீ கிராண்ட் ரெக்ஸ்’ அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

சுமார் 2200 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான திரையரங்கம் ‘லீ கிராண்ட் ரெக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய படமாக ரஜினியன் ‘கபாலி’ படம் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து `பாகுபலி-2′ படம் திரையிரப்பட்டது.

இந்நிலையில், விஜய்யின் `மெர்சல்’ படத்திற்கு அந்த அந்தஸ்து கிடைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.