சப்ரகமுவ மாகாண சபைக்கு கேகாலையிலிருந்து இரு பிரபலங்கள்..

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சப்ரகமுவ மாகாண சபையின் கேகாலை மாவட்டத்திற்கு போட்டியிட இரு பிரபலங்களை களமிறக்க கட்சிகள் இரண்டு கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரபல பாடகர் ரூகாந்த குணதிலகவை களமிறக்க யோசனைகள் முன்வைக்கப்படுவதோடு, இது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக குறித்த கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ரூகாந்த தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தரங்க பரணவிதான கேகாலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும், அதுகுறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)