சந்தையில் விற்பனையாகும் எண்ணெய் வகைகளில் இரசாயன கலப்பு..

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் 90% எண்ணெய் வகைகள் தரமற்றவை என, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட எண்ணெய் மாதிரிகளை ஆய்வு செய்ததில் குறித்த இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

பாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் மரக்கறி எண்ணெய் வகைகளின் மாதிரிகளே பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

குறித்த இந்த எண்ணெய் வகைளில் பிறிதொரு இரசாயனம் கலக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேற்குறித்த இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)