இந்த காலத்தில் எல்லோருடைய வீட்டிலும் குளிர்சாதன பெட்டி உள்ளது. குறிப்பாக அதில் இருக்கும் பிரீசர் [Freezer]பால், இறைச்சி போன்ற பொருட்களை பதப்படுத்த பயன்படுகிறது.
அடிக்கடி எடுக்கும் பொருட்களை பிரிட்ஜில் வைக்கலாம். எப்போதாவது எடுக்கும் பொருட்களை ப்ரீசரில் வைக்கலாம். எந்தெந்த உணவுகளை பிரிட்ஜ் அல்லது ப்ரீசரில் வைப்பது நல்லது என்பது பலருக்கும் தெரியாது. ப்ரீசரில் வைக்க வேண்டிய சில உணவு வகைகளை பற்றி பார்ப்போம்.
நட்ஸ்:
நட்ஸில் எண்ணெய் அதிகம் இருப்பதால், அதனை வெளியில் வைக்கும்போது ஒரு வாரத்திற்குள், அதில் எண்ணெய் வாசனை வந்துவிடும். அதன்பிறகு அதனை உண்ணும்போது ஒரு வித துர்நாற்றம் வீசும். அதனை ப்ரீசரில் வைக்கும்போது இந்த எண்ணெய் வாசனை வாராமல் தடுக்கலாம்.வேண்டிய அளவை பிரிட்ஜில் வைத்து, மீதம் உள்ளதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ப்ரீசரில் வைக்கலாம்.
அதிகம் கனிந்த வாழைப்பழம்:
வாழைபழத்தை தோல் உரித்து விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி, ஒன்றோடு மற்றொன்று ஒட்டாமல் ஒரு கவரில் போட்டு ப்ரீசரில் வைக்கலாம். தோலோடு வைக்கும்போது freez ஆனவுடன் உரிப்பதற்கு சிரமமாக இருக்கும். விரும்பும்போது அதனை எடுத்து Milk shake அல்லது வேறு வகை இனிப்புகள் செய்யும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
முட்டை:
நிறைய முட்டைகள் வாங்கி ப்ரீசரில் வைத்துக் கொள்ளலாம். முட்டையை முழுதாக அப்படியே ப்ரீசரில் வைக்க கூடாது. அதிக குளிர்ச்சியால் ஓடுகள் விரிசல் ஏற்பட்டு உடைய நேரிடும். ஆகவே முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து , ஒரு பையில் ஊற்றி அப்பையை சீல் செய்யவும். ஒரு முறை தேவைப்படும் அளவு முட்டைகளை , உடைத்து உப்பு சேர்த்து ,ஒரே பையில் ஊற்றி ப்ரீசரில் வைக்கலாம்.
பூண்டு, வெங்காயம்:
வெங்காயம் , பூண்டு போன்றவை முன்கூட்டியே தோல் உரித்து அறிந்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து ப்ரீசரில் வைத்துக் கொள்ளும்போது அவசர நேரத்தில் உதவியாக இருக்கும். இதனை சில மணி நேரம் முன்பே வெளியில் எடுத்து வைத்து சமைக்க வேண்டும் என்பதில்லை. தேவைப்படும் நேரத்தில் நேரடியாக சமைக்கும் பொருளில் சேர்த்துக் கொள்ளலாம்.