புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக இம்மாதம் 20ம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், வௌியாகியுள்ள பெறுபேறுகளில் முரண்பாடுகள் இருப்பின் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1911 என்ற இலக்கத்திற்கோ அல்லது 011 – 2784 208, 011 – 2784 537, 011 – 3188 350 என்ற இலக்கங்களுக்கோ அறிவிக்க முடியும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
(rizmira)