Big Bad Wolf உலகின் மிகப் பெரிய புத்தக கண்காட்சி ஆரம்பம்…

உலகின் மிகப் பெரிய புத்தக கண்காட்சியாக கருதப்படும் Big Bad Wolf புத்தக கண்காட்சி முதற்தடவையாக இலங்கையில் நடைபெறுகின்றது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில், கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(05) ஆரம்பமானது. இந்த கண்காட்சி எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உலகம் முழுவதும் வாசிக்கப்படும் சுமார் 2,000 பிரபல ஆங்கில புத்தகங்கள் உள்ளிட்ட 15 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த புத்தக விற்பனை 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.