புதிய முடிகளை வளர செய்ய உருளைக்கிழங்கு தோலை ட்ரை பண்ணுங்க …

முடி உதிர்வு பிரச்சனை என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொதுவான ஒன்று தான். இந்த பிரச்சனை, அழகு சார்ந்ததாகவும் இருக்கலாம், ஊட்டசத்து குறைபாடு காரணமாகவும் இருக்கலாம்.

உருளைக்கிழங்கு ஜூஸ்:
முடி உதிர்வை கட்டுப்படுத்த பல வழிகள் இருந்தாலும் கூட, ஜூஸை தலையில் பூசுவது மிகச்சிறந்த வழியாக இருக்கும். இதிலுள்ள பல விட்டமின்கள் உங்களது தலைமுடிக்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து தலைமுடியை வலிமையாக்குகிறது.

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 4
தண்ணீர் – 1/2 கப் (100மிலி)

செய்முறை :
முதலில் உருளைக்கிழங்கை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் அரைக்கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த உருளைக்கிழங்கு நன்றாக அரைப்பட்டதும், அதை சுத்தமான துணியில் போட்டு, அதன் சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை :
உருளைக்கிழங்கு ஜூஸை முதலில் முடியின் வேர்க்கால்களில் நன்றாக தடவி, மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மீதமுள்ள ஜூஸை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள். 20 முதல் 25 நிமிடங்கள் வைத்திருந்த பின்னர் முடியை மிதமான சூடுள்ள நீர் அல்லது குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

நீங்கள் பலனை கண்கூடாக பார்க்கும் வரை இதனை தினமும் செய்ய வேண்டும். அதன் பின்னர் வாரத்திற்கு மூன்று முறை இதே போன்று செய்யலாம்.

உருளைக்கிழங்கு தோல் உருளைக்கிழங்கின் ஜூஸ் மட்டுமல்லாமல், உருளைக்கிழங்கின் தோலும் உங்களது முடியை வலிமையாக்க உதவுகிறது. இது முடி உதிர்வையும் தடுத்து நிறுத்துகிறது.

தேவையான பொருட்கள் :
1. உருளைக்கிழங்கு தோல்
2. தண்ணீர் – 1 லிட்டர்

செய்முறை :
உருளைக்கிழங்கு தோலை மண் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் தோலை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். சில நிமிடங்கள் உருளைக்கிழங்கு தோல் தண்ணீரில் நன்றாக கொதித்ததும், அதனை குளிர செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் முறை :
உருளைக்கிழங்கு தோல் நீரை, முடியில் நன்றாக அலச வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு முதல் மூன்று தடவைகள் செய்வதன் மூலம், நல்ல பலனை பெற முடியும்.