ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயை உதட்டில் தடவி வந்தால் உதடுகள் வறண்டு போகாமல் அல்லது காய்ந்து போகாமல் அழகாக இருக்கும்.
நமது உதடுகள் வறட்சி ஏற்படும் போது அல்லது காய்ந்து விடும்போது, நாம் நமது நாவினால், உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம்.
உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, நமது உடலின் வெப்பநிலை உயர்ந்து விட்டதன் அறிகுறியாக காணப்படுகின்றது.
ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்கு வதை தவிர்த்து உஷ்ணத்தைக் குறைக்கும் தயிரை பருகி வர வேண்டும்.
மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து சாப்பிடலாம். ஒவ்வொரு நாள் இரவில் தூங்கும் முன் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல வேண்டும்.
இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள உஷ்ணம் குறைந்து, உதடுகள் தானாகவே வறண்டு போகாது, அல்லது காய்ந்து போகாது.