நோபல் பரிசை வென்றது ICAN அமைப்பு…

2017 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐ கேன்(ICAN – The International Campaign to Abolish Nuclear Weapons ) அமைப்பிற்கு கிடைத்துள்ளது.

ஜெனிவாவைத் தளமாகக் கொண்டுள்ள இந்த அமைப்பு, அணுவாயுதப் பயன்பாட்டுப் பேரழிவுகளால் ஏற்படும் மனிதாபிமானமற்ற விளைவுகளை எடுத்துக்கூறி வருகிறது. அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.