மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ.மு.கா., ஐ.தே.கட்சியுடன் இணைகிறது..

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; ஒரு சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடவும் தமது கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)