மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்கும் பிரபலங்கள்…

காற்றுவெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்திற்கான நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைகஞர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி விஜய்சேதுபதி, சிம்பு, பகத் பாசில், அரவிந்த்சாமி ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இந்த படம் மெகா பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.