களுத்துறையின் சில பகுதிகளில் 9 மணித்தியால நீர் வெட்டு…

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(10) 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பயாகலை, மக்கொனை, பேருவளை, களுவாமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய இடங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நீர் விநியோகம் தடைப்படுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

குழாய் திருத்தப் பணிகள் காரணமாக குறித்த இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.