களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(10) குழாய் திருத்தப் பணிகள் காரணமாக 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி, பயாகலை, மக்கொனை, பேருவளை, களுவாமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்காநகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய இடங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நீர் விநியோகம் தடைப்படுமென குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
(rizmira)