அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்…

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே வனப்பகுதிகளை அண்மித்து வாழ்கின்ற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் காற்று வேகமாக வீசுவதால் தீ பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1500 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

இந்த காட்டுத்தீ சம்பவத்தை தொடர்ந்து கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.