சைட்டம் எதிர்ப்பு பாத யாத்திரையால் நகர மண்டப அருகில் கடும் வாகன நெரிசல்..

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பாத யாத்திரை சற்றுமுன்னர்(02.00 பி.ப) கொழும்பு – நகர மண்டப அருகில் ஆரம்பிக்கப்பட்டமையினால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாத யாத்திரைக்கு அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)