நாமல் உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியலில்…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, உட்பட 6 பேர் இன்று(10) ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ, டி. வீ ஷானக, பிரசன்ன ரணவீர, உபாலி கொடிகார, சம்பத் அதுகோரல மற்றும் அஜித் பிரசன்ன உட்பட 6 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புப்பேரணி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் உள்ளிட்ட 6 பேர் இன்று(10) மாலை ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்த நிலையிலேயே குறித்த 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.