அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் (09:20 AM) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று(10) அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.
(rizmira)