கண்டி புகையிரத நிலைய நுழைவுச்சீட்டு கவுண்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..

சாதாரண புகையிரத நுழைவுச்சீட்டினை வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தமை காரணமாக கண்டி புகையிரத நிலைய நுழைவுச்சீட்டு கவுண்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் மற்றும் பல தரப்பினரால் பெறப்பட்ட  முறைப்பாடுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புகையிரத பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய புகையிரத ஒழுக்காற்றுக்குழு அது தொடர்பிலான அறிக்கையை புகையிரத மேலாளருக்கு வழங்கியுள்ளது.

மேலும், குறித்த நுழைவுச்சீட்டு கவுண்டர் வாடகை அடிப்படையில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமானது என புகையிரத பொது மேலாளர் எஸ்.எம்.அபேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.