முகத்திற்கு மூலதனமாக இருக்கும் கண் நமது உடலின் ஒரு முக்கிய உறுப்பாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் மிகவும் சிறந்த மற்றும் கவர்ச்சியான கண்களைக் கொண்டு மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.
ஐ-லைனர்களை கண்களுக்கு தீட்டுவதில் சிறந்த அனுபவமும் மற்றும் நிறைவும் இருக்க வேண்டும். உங்களுக்கு எந்த வகையெல்லாம் விருப்பமாக உள்ளனவோ, அவற்றையெல்லாம் இங்கே நீங்கள் பயன்படுத்த முடியும்.
சிறகு போல தீட்டுங்கள்:
பூனை விழிகள் போல் வேண்டும் என்று நினைத்தால், சிறகு போன்ற வடிவில் ஐ-லைனர்களை மிகவும் அச்சாக தீட்டிக் கொள்ளுங்கள். இந்த வழிமுறை சற்றே எளிமையானது. மொத்தமான லைனரை முதலில் கண்ணின் மேல் மடல் பகுதியிலும், பின்னர் கீழ் பகுதியிலும் தீட்டி விட்டு, கண்ணின் வெளி முனைப்பகுதி வரை சிறகு போல நீட்டி விட் வேண்டும்.
பட்டையாக தீட்டுங்கள்;
ஐ-லைனர்களை பட்டையாக தீட்டிக் கொள்வது இப்பொழுது பலரின் விருப்பமாக இருக்கின்றது. கண்களின் இரு மடல்களிலும் சாதாரணமாக தீட்டுவதைப் போல ஐ-லைனரை தீட்டி விட்டு, அதன் மேலாக இலேசாக அழுத்தம் கொடுத்து லைனரால் தேய்க்கவும். குறிப்பாக கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியின் முனைகளில் இவ்வாறு தேய்க்க வேண்டும்.
360 டிகிரிகள்:
இது மிகவும் பிரபலமாக இருக்கும் மற்றுமொரு ஐ-லைனர் வழிமுறையாகும். சமமாகவும் மற்றும் சரியாகவும் கண்களைச் சுற்றிலும் லைனரை தீட்டி வைக்க வேண்டும்.
மாறுபட்ட தொடர்புகள்:
ஒன்றுக்கொன்று மாறுபட்ட வண்ணங்களை இணைத்துக் கொள்வது இன்றைய டிரெண்டாக உள்ளது. வெள்ளை அல்லது அது போன்ற லைட்டான வண்ணத்தை எடுத்துக் கொண்டு, அவற்றை கண் மடல்களில் தடவுங்கள். பின்னர் நீங்கள் பயன்படுத்தும் லைனரை எடுத்து, வழக்கமாக தீட்டுங்கள்
கண்களுக்கு வண்ணம் சேருங்கள்:
உடைகள் அல்லது மேக்கப் என எந்தவொரு டிரெண்ட் மற்றும் வகை என எதுவாக இருந்தாலும் வண்ணங்கள் அதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கருப்பு நிறத்திற்கு மேலாக வண்ணத்திலான ஐ-லைனர்களை அடித்துக் கொள்வது இந்த காலத்தில் பிரபலமாகி வருகிறது.