இலங்கையின் அபிவிருத்தித் திட்டத்திற்கு நன்கொடைகள் வழங்க பின்லாந்து நடவடிக்கை…

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நன்கொடைகளையும், சலுகை கடனுதவிகளையும் வழங்க பின்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான ஒப்பந்தம் பின்லாந்து வெளிவிவகார அமைச்சில் நேற்று(10) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான பின்லாந்து ஒத்துழைப்பு நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இலங்கைக்கும், பின்லாந்துக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் உதவியாக அமைந்தது என பின்லாந்தின் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் மீக்கா லின்ட்லா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையில் டிஜிட்டல் மயமாக்கம் தொடர்பான ஒப்பந்தமும் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சூழல் உருவாகி வருவதாக பின்லாந்தின் கைத்தொழில் சம்மேளனம் அறிவித்துள்ளது.