இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

மேல், சப்ரகமுவ, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மழையுடனான காலநிலை சிலநாட்களுக்கு தொடரும் என தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன்கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக காற்று வீசக் கூடும் எனவும் மின்னல் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.