
புகையிரத சாரதிகளின் திடீர் வேலை நிறுத்தத்தின் தற்போதைய நிலை….
புகையிரத சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடவடிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்றிரவு(11) முதல் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றாலும் சில புகையிரதங்கள் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தறையில் இருந்து கொழும்பு வரை, அவிசாவளையில் இருந்து கொழும்பு வரையான மற்றும் பொல்கஹாவெல, மஹவையில் இருந்தான அலுவலக புகையிரதங்கள், கொழும்பு நோக்கி பயணிப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.