உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பிலான சட்ட மூலத்தின் மூன்று கட்டளைகளில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் கையொப்பம் இட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பொருட்டு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை ஆகிய 3 கட்டளைச் சட்டங்களிலேயே சபாநாயகர் இவ்வாறு கையொப்பம் இட்டுள்ளார்.