கர்ப்பிணிப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய அழகு குறிப்பு…

ஒரு பெண் குழந்தையை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏராளமான மாற்றங்களை சந்திப்பார்கள். வாழ்க்கையில் புதுமையான அனுபவத்தை சந்திக்கும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்களும் உண்டு அதே சமயம் அதனை கையாளத் தெரியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவர்.

கர்ப்பமாக இருக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றத்தினால் அதன் பிரதிபலிப்பு சருமத்திலும் தோன்றிடும். அதற்கு பல்வேறு அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதால் கர்ப்பமாக இருக்கும் போது இவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா? நாம் இதனை பயன்படுத்துவதால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா? என்ற சந்தேகம் எழலாம்.

இதற்கு தீர்வு காணும் வகையில் எந்த கெமிக்கலும் சேர்க்காத இயற்கையான பொருட்களைக் கொண்டு கர்ப்பிணிப்பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்.

கற்றாழை ஜெல் :
அலர்ஜி அல்லது வேறு ஏதேனும் சருமப்பிரச்சனை இருக்கும் இடங்களில் இந்த ஜெல்லை எடுத்து தடவுகள். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம். ஜெல் தடவிய சிறிது நேரத்திலேயே சருமம் ஜெல்லை உறிந்து கொள்ளும் ஆனாலும் நீங்கள் கழுவுவதால் அந்த பிசுபிசுப்புத்தன்மை இருக்காது. இதனை தினமும் கூட பயன்படுத்தலாம்.

வெள்ளரி :
சருமத்தில் வெவ்வேறு நிற மாற்றங்கள் உண்டாகியிருந்தால் அதனை போக்க இதனை முயற்சிக்கலாம். வெள்ளரியை அதன் விதைகளை நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த அந்த விழுதுடன் பால் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். இதனால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

விட்டமின் E:
உங்கள் உடலில் விட்டமின் E குறைந்தால் கூட சருமத்தில் அதன் பாதிப்புகள் தெரியும். சருமத்திற்கு தேவையான சத்துக்களையும் நாம் கொடுக்க வேண்டும். அதனால் அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் விட்டமின் E இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்

தயிர் :
சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றினால் அதற்கு தயிர் சிறந்த மருந்தாக அமைந்திடும். பப்பாளிக்கூழுடன் தயிர் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இதனை சருமத்தில் இரண்டு லேயர்களாக அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவிடலாம்.

உருளைக்கிழங்கு :
ஒன்று உருளைக்கிழங்கை பெரிய பீஸாக கட் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு உங்கள் முகத்தை துடைத்தெடுக்கலாம். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கிடும்.
இதே போல உருளைக்கிழங்கை தோல்சீவி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதிலிருந்து சாறெடுத்து அதனையும் முகத்தில் அப்ளை செய்யலாம்.

தண்ணீர் :
சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்க வேண்டுமானால் போதுமான அளவு தண்ணீர் சத்து அவசியம். அதனால் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ் :
முகத்தில் சுருக்கம், பரு, அல்லது அதிகப்படியான வரண்ட சருமம் இருப்பவர்கள் ஓட்ஸை முகத்திற்கு பயன்படுத்தலாம். ஓட்ஸை முதலில் தனியாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். அவற்றுடன் காய்ச்சாத பாலை இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவி விடலாம். இதே எண்ணெய் பசையுள்ள சருமம் என்றால் தயிருடன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.