இலங்கை புகையிரத சேவை இன்று முதல் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்..

இன்று(12) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடப்படுத்துவதாக போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத சாரதிகள் மற்றும் புகையிர காப்பாளர்கள் சங்கத்திற்கு தீர்மானம் எடுப்பதற்கு இன்னும் ஒரு மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

(rizmira)