நாட்டின் பெரும்பாலான பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை…


நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்கள் வரை நீடிக்குமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடமாகாணங்களிலும், அனுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறியுள்ளது.

சில பிரதேசங்களில் மணிக்கு சுமார் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகலாமென்று திணைக்களம் இன்று(13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்றுவீசக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து மக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.