7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது…

சுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் ஹட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலை பகுதியில் நேற்றிரவு(12) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கழிவு தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து டிக்கோயா பட்டல்கலை பகுதிக்கு லொறியில் கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள இருவரையும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.