கொட்டாஞ்சேனை வாசல வீதி சந்தியிலிருந்து பரமானந்த விகாரை வரையிலான பகுதியில் இன்று(13) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிலக்கீழ் நீர்குழாய் திருத்த பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணமாக குறித்த பகுதிக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று(13) இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் போக்குவரத்திற்காக அனுமதிக்கப்படும் எனவும் ஏனைய வாகனங்கள் சென் பெனடிக் வீதியினூடாக புளுமெண்டல் வீதியினை சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.