சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 189 ஆக அதிகரித்துள்ளதுடன் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சோமாலியா தலைநகரான மொகதீசுவில், அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு குறிவைத்து நேற்று முன்தினம் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொகதீசுவில் இதற்கு முன்னர் இதுபோன்ற பயங்கரமான தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.