ரோஹிங்கியா அகதிகள் படகு கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு…

வங்காளதேசம் அருகே ஆற்றில் படகு கவிழ்ந்து ரோஹிங்கியா அகதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

படகில் சுமார் 50 பேர் பயணம் செய்ததாகவும், அதில் குழந்தைகள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஏனையோர்களை தேடும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் இராணுவ ஒடுக்குமுறை மற்றும் வன்முறை காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இன்று(16) மியன்மாரில் இருந்து வங்காளதேசத்தை நோக்கி படகில் வந்தபொழுது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த 6 வாரங்களில் மாத்திரம் சுமார் 200 ரோஹிங்கியாக்கள் படகு விபத்தில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.