கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு பூட்டு…

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.