ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 09 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று(17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்துள்ளார்
கொழும்பு, அம்பாறை, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய 05 மாவட்டங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்கள்:
1. நலீன் குணசேக்கர – கொழும்பு மாவட்டம்
2. மீரா லெப்பை ரெபுபாசம் – அம்பாறை மாவட்டம்
3. நவநீதராஜா – அம்பாறை மாவட்டம்
4. ஐ.எச். அப்துல் வஹாப் – அம்பாறை மாவட்டம்
5. டீ.ரபாய்தீன் – அம்பாறை மாவட்டம்
6. பிரநீத் பத்மதிலக – மாத்தறை மாவட்டம்
7. எம்.எச்.எம். சகரியா – இரத்தினபுரி மாவட்டம்
8. ஆரியரத்ன விஜேவிக்ரம – அம்பாறை மாவட்டம்
9. சுஜீவ கொடலியத்த – மாத்தளை மாவட்டம்