இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று(18) அபுதாபியில் இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் தில்வெல்ல 88 ஓட்டங்களைப் பெறுவாராக இருந்தால், அவர் 1000 ஒருநாள் ஓட்டங்களை கடப்பார்.
26வது இன்னிங்ஸில் விளையாடவுள்ள நிரோசன் திக்வெல்ல இன்று(18) 1000 ஓட்டங்களை கடக்கும் பட்சத்தில், இலங்கை சார்பில் அதிக வேகமாக 1000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் பதிவு செய்தார்.
இதற்கு முன்னர் ரோய் டயஸ் 27 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்தமையே சாதனையாக இருக்கிறது.
(rizmira)