மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென விவசாயிகளுக்கு மானிய விலையில் உர வகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கல்கமுவ, யாப்பஹுவ, மாகோ, நிக்கவரட்டிய, எஹட்டுவௌ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விதைகள், கன்றுகள் முதலான விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 450 விவசாயிகள் பயன்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் 600 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் புதிதாக மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.